முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தமிழ் பேசும் மக்களின் நம்பிக்கையை குழிதோண்டி புதைக்கக்கூடாது!
[Sunday, 08/01/2017 06:07 AM]

பல்வேறு வாக்குறுதிகளை வாரி வழங்கி மாறி மாறிப் பதவிக்கு வரும் அரசாங்கங்கள் தமிழ் பேசும் சிறுபான்மை மக்களை ஏமாற்றும் விதமாகவும் அவர்கள் மீது சவாரி செய்யும் வகையிலுமே தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தமிழ் மக்கள் மிகுந்த விசனம் தெரிவிக்கின்றனர்.

அந்த வகையில் நல்லாட்சி அரசின் போக்கும், முன்னைய அரசின் போக்கை ஒத்ததாகவே இருந்து வருவதாகவும் அதனால் நம்பிக்கையீனங்களே மேலோங்குவதாகவும் குற்றம் சுமத்தப்படுகிறது.

நல்லிணக்கப் பொறிமுறை குறித்த செயலணியின் பரிந்துரையினை அரசாங்கம் தற்பொழுது நிராகரித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் மனோரி முத்தெட்டுவேகம தலைமையில் அமைக்கப்பட்டதே குறித்த நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான மக்கள் கருத்தறியும் செயலணியாகும். இதில் 12 புத்திஜீவிகள் அடங்கியிருந்தனர்.

இந்நிலையில் அவர்களால் தயாரிக்கப்பட்ட அறிக்கையானது கடந்த செவ்வாய்க்கிழமை, முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகத்தின் தலைவருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம் கையளிக்கப்பட்டது.

அந்த அறிக்கையில், சர்வதேச நீதிபதிகளின் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டிருந்தது. இதுவே குறித்த அறிக்கை நிராகரிக்கப்படக் காரணமாகும்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன, ''பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்கும் பொறிமுறையில் எக்காரணம் கொண்டும் சர்வதேச நீதிபதிகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் சாத்தியமில்லை. நாங்கள் நியமித்த செயலணியின் சகல பரிந்துரைகளையும் ஏற்றுக்கொள்ளும் அவசியமில்லை. சர்வதேச நீதிபதிகளை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதை ஐ.நாவிடம் தெளிவுப்படுத்திவிட்டோம்'' என்று கூறியுள்ளார்.

அத்தோடு மாத்திரம் அமைச்சர் நின்று விடவில்லை. ''செயலணியிலுள்ளவர்கள் பெரும் புத்திஜீவிகளல்ல. எமது நாட்டைச் சேர்ந்தவர்களே. எனவே இவர்களின் பரிந்துரைகளை கட்டாயம் ஏற்க வேண்டுமென்ற எந்த நியதியும் கிடையாது'' என்றும் கூறியுள்ளார்.

இந்த செயலணியானது நாடு முழுவதும் 1306 கலந்துரையாடல்கள் , 4872 பொதுக் கூட்டங்கள் ,1048 எழுத்துரு சமர்ப்பிப்புக்கள் மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதனை நேரடியாக ஜனாதிபதியிடம் கையளிக்க இரு தடவைகள் முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதிலும் அது சாத்தியமாகாத நிலையிலேயே இறுதியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நீதிபதிகளை ஒருபோதும் உள்வாங்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாகவே கூறி வருகிறார்.இந்நிலையில் நல்லிணக்கப் பொறிமுறை குறித்த செயலணி, சர்வதேச நீதிபதிகளின் அவசியத்தை வலியுறுத்துவது அவருக்கு தர்ம சங்கடமான நிலையைத் தோற்றுவித்திருக்கலாம். அதுவே அறிக்கையை அவர் நேரடியாகக் கையேற்காமைக்கான காரணம் என்றும் கூறப்படுகின்றது.

மறுபுறம், தென்னிலங்கை சக்திகள் போர்க்கொடி தூக்க இது வாய்ப்பாகி விடும் என்றும் அவர் கருதியிருக்கலாம்.எவ்வாறெனினும், குறித்த செயலணியின் பரிந்துரைகள் அரசாங்கத்துக்கு சவால் மிக்கதாக மாறி விடுமோ என்ற அச்சம் அரச தரப்பினர் மத்தியில் ஏற்பட்டுள்ளதை அவர்களின் திடீர் நிராகரிப்பு எடுத்துக் காட்டுவதாகவே கொள்ள வேண்டும்.

குறித்த செயலணியின் பரிந்துரையில் போர்க்குற்றங்கள், மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள், ஆட்கடத்தல், சித்திரவதை, பாலியல் வன்புணர்வு போன்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றமிழைத்தவர்களால் உண்மையை ஒப்புக்கொள்வதன் வாயிலாக மன்னிப்புக் கோருவதை ஏற்க முடியாது. அது சட்டவிரோதமானது என பரிந்துரைக்கின்றது.

இந்த செயலணியின் பரிந்துரைகள் அரசின் மீதுள்ள பொறுப்பையும் அரசாங்கம் அதனை நிறைவேற்ற வேண்டிய கடப்பாட்டையும் சுட்டிக்காட்டுகின்றன.

அந்த வகையில் செயலணியின் பரிந்துரைகளை அரசு செயற்படுத்த முனைந்தால் மறுபுறம், எதிர்த்தரப்பின் அரசுக்கு எதிரான பிரசாரத்துக்கு வாய்ப்பாகப் போய்விடும் என்ற அச்சமும், அரசாங்கம் விழுந்தடித்துக் கொண்டு அதனை நிராகரித்தமைக்கான காரணங்களில் முக்கியமானதாக அமையலாம்.

இதேவேளை, ''பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் பொறிமுறை நம்பகரமாகவும் இயலுமை கொண்டதாகவும் அமைய வேண்டும் என்பதற்காகவே மக்களின் கருத்துக்களுக்கு அமைவாக சர்வதேச நீதிபதிகள் இடம்பெற வேண்டுமென்ற கோரிக்கையை நாம் பரிந்துரை செய்தோம். வடக்கு, கிழக்கு மக்கள் மாத்திரமன்றி, தென்னிலங்கை மக்களும் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்" என நல்லிணக்க பொறிமுறை தொடர்பான செயலணி விளக்கமளித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள செயலணியின் பொதுச் செயலாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, ''நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. நாங்கள் கலப்பு நீதிமன்ற பொறிமுறையை முன்வைத்துள்ளோம். ஜெனீவா பிரேரணையிலும் இவ்விடயம் உள்ளடங்கியுள்ளது. நம்பகத்தன்மை மற்றும் அனுபவம் ஆகிய இரு விடயங்களுக்காகவே சர்வதேச நீதிபதிகளை மக்கள் கோருகின்றனர்'' என்று கூறியுள்ளார்.

செயலணியின் உறுப்பினரான சித்திரலேகா மௌனகுரு இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், "உண்மை, நீதி ஆகிய இரண்டுமே தமக்குத் தேவை என மக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்துகின்றனர். அந்த வகையில் மக்களின் கருத்துக்களே பரிந்துரைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன. போரினால் ஏற்பட்டுள்ள வடுக்களை நீக்குவதற்கு நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும். இதனை மக்கள் வலியுறுத்தி கூறியுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

செயலணியின் இதர உறுப்பினர்களும் தாங்கள் மக்களின் கருத்துக்களைப் பிரதிபலிப்பதாகவே கூறியுள்ளனர். செயலணியின் தலைவர் மனோரி முத்தெட்டுவேகம, 92 உறுப்பினர்கள், வலய ரீதியில் 15 செயலணிகளை நியமித்து மக்களின் கருத்துக்களை நாடு தழுவிய ரீதியில் சுயாதீனமாகப் பெற்றதாகவும் அந்த வகையில் அவர்களின் பரிந்துரைகளையே அறிக்கையாக முன்வைத்ததாகவும் கூறியுள்ளார்.

நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான மக்கள் கருத்தறியும் செயலணியின் முன் பிரசன்னமான வடக்கு, கிழக்கு மாத்திரமன்றி தென்னிலங்கை மக்களும் விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளமை புலனாகின்றது.

அத்துடன் வடக்கு, கிழக்கு மக்கள் காணாமல் போனோர் தொடர்பில் சர்வதேச மட்ட தடயவியலாளர்களின் பிரசன்னத்தின் அவசியம் குறித்தும் வலியுறுத்தியுள்ளனர்.

இவ்வாறான பின்னணியில் கடந்த காலத்தில் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கை எவ்வாறு குப்பைத் தொட்டியில் போடப்பட்டதோ அவ்வாறானதோர் சூழ்நிலையே இதற்கும் ஏற்படுமோ என்ற ஐயம் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சிறுபான்மை தமிழ் மக்கள் விவகாரத்தில் முன்னைய அரசுகள் மேற்கொண்ட அனைத்து விடயங்களும் வெறும் கண்துடைப்பென்பதை தமிழ் மக்கள் நன்கு உணர்ந்து வைத்துள்ளனர்.

மீண்டும் அதேவகையான சூழல் ஏற்படாதிருப்பதை உறுதி செய்வது அரசின் கடப்பாடாகும்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தமது உள்நாட்டு விசாரணை பொறிமுறைகளால் ஒரு போதும் நீதி கிடைக்கப் போவதில்லை என்பதை நன்குணர்ந்த நிலையிலேயே சர்வதேச நீதிபதிகளை வலியுறுத்தி வருகின்றனர்.

அதற்கு வலு சேர்க்கும் வகையிலேயே அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளும் அமைந்துள்ளதாகக் கருத வேண்டியுள்ளது.

மக்களின் கருத்துக்களை நிராகரிப்பதானால் அத்தகைய செயலணியை அமைத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. மேலும் காலத்தை வெறுமனே வீணடித்த முயற்சியாகவே அது அமையும்.

அரசாங்கங்கள் தமிழ் பேசும் மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்ப முயற்சிக்க வேண்டும். மாறாக அதனை மேலும் மேலும் குழி தோண்டிப் புதைக்கக் கூடாது என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
சிறிலங்காவில் இராணுவ மறுசீரமைப்பு சாத்தியமா?
[Thursday, 21/12/2017 07:23 AM]
சிறிலங்காவில் சீனாவுக்கு செக் வைக்க விரும்பும் இந்தியா
[Sunday, 10/12/2017 12:40 AM]
பிரபாகரன்: ஆட்டிப் படைக்கும் ஆளுமை
[Sunday, 26/11/2017 08:08 AM]
முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு மீதான தாக்குதல்
[Monday, 13/11/2017 06:14 AM]
எப்படித் தலைமை தாங்க வேண்டும் என்று தலைவர்களுக்கு புத்தர் போதிக்கவில்லை
[Thursday, 09/11/2017 07:06 AM]
நாடாளுமன்ற சமநிலையை மாற்றியமைக்குமா உச்சநீதிமன்ற தீர்ப்பு?
[Tuesday, 07/11/2017 06:52 AM]
தேர்தல் அறிவிப்பு: புதிய அரசியலமைப்பு விவாதத்தை விழுங்கிவிட்டது!
[Sunday, 05/11/2017 03:25 AM]
கிராமங்களில் வறுமையை வளர்த்த சிங்கள பௌத்த மேலாதிக்கம்
[Friday, 03/11/2017 05:42 AM]
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் வலியை வெளிப்படுத்தி நிற்கும் ஒரு மரணம்
[Friday, 27/10/2017 05:46 AM]
சிறிலங்காவில் சீனாவுக்கு செக் வைக்கும் அமெரிக்கா
[Monday, 16/10/2017 07:04 AM]
அமெரிக்கா பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்!
[Sunday, 03/09/2017 01:32 AM]
சீனாவின் கடன்பொறி – சிறிலங்கா முன் உள்ள சமநிலை சவால்
[Monday, 21/08/2017 12:45 AM]
சீனாவிடம் அம்பாந்தோட்டை – இந்தியா கவலைப்படுவது ஏன்?
[Friday, 04/08/2017 07:07 AM]
மலபார் கூட்டுப் பயிற்சி – யாரைக் குறிவைக்கிறது?
[Wednesday, 02/08/2017 07:19 AM]
சிறிலங்கா அரசுக்கு கடுப்பை ஏற்படுத்திய ஐ.நா சிறப்பு நிபுணரின் பூர்வாங்க அறிக்கை
[Monday, 24/07/2017 07:06 AM]
வரலாற்றுப் பழி சுமக்குமா கூட்டமைப்பு?
[Monday, 17/07/2017 04:12 AM]
காணாமல் போன பிரிகேடியர்! இரகசியங்கள் கசியுமா?
[Sunday, 16/07/2017 03:49 AM]
போர்க்குற்ற விசாரணைக்கான கதவுகள் திறக்கப்படுமா?
[Sunday, 09/07/2017 07:37 AM]
மக்களால் தோற்கடிக்கப்பட்ட சக்திகளின் மறைமுக சதி!
[Friday, 07/07/2017 05:23 AM]
தமிழ் தேசியவாத அரசியலின் தோல்வி!
[Friday, 07/07/2017 05:22 AM]
தமிழ்மக்கள் விக்னேஸ்வரனுக்கு உணர்த்தியிருக்கும் பொறுப்பு – நிலாந்தன்
[Sunday, 25/06/2017 04:38 AM]
வடமாகாண சபைக்கு ஓர் திறந்த மடல்! ச.வி.கிருபாகரன்
[Tuesday, 20/06/2017 01:54 PM]
விக்னேஸ்வரனின் எழுச்சியும் வீழ்ச்சியும்
[Monday, 19/06/2017 07:00 AM]
ஆப்பிழுத்த தமிழரசுக்கட்சி? அரசியல் தற்கொலைக்கு முயற்சிக்கிறதா? – நிலாந்தன்
[Sunday, 18/06/2017 07:51 PM]
வடமாகாண சபையின் எதிர்காலம்?
[Sunday, 18/06/2017 06:34 AM]
சிறிலங்காவினால் புறக்கணிக்கப்படும் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகள்
[Wednesday, 14/06/2017 07:35 AM]
போர் முடிந்து 8 ஆண்டுகளுக்கு பின்னரும் சிறிலங்கா திரும்புவதற்குத் தடுமாறும் அகதிகள்
[Sunday, 11/06/2017 06:27 AM]
சிறிலங்கா விற்பனைக்கா? – கேள்வி எழுப்பும் பாகிஸ்தான் ஊடகர்
[Thursday, 08/06/2017 05:09 PM]
வடக்கு, கிழக்கில் உலோக வீடுகளை அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் சிவில் சமூகம்
[Monday, 05/06/2017 01:39 AM]
ஹெய்டியில் சிறிலங்கா படைகளின் பாலியல் குற்றங்கள் மூடிமறைக்கப்பட்டது எப்படி? – பகுதி -2
[Monday, 05/06/2017 01:34 AM]
சிறிலங்கா படைகளின் பாலியல் குற்றங்கள் மூடிமறைக்கப்பட்டது எப்படி? – அனைத்துலக ஊடகம்
[Saturday, 03/06/2017 07:43 AM]
சிறிலங்காவுக்காக போட்டி போடும் இந்தியாவும் சீனாவும்
[Monday, 29/05/2017 10:41 PM]
போராடும் மக்களின் நம்பிக்கையை இழந்து வரும் சிறிலங்கா அரசாங்கம் : பாகம் -2
[Sunday, 28/05/2017 01:35 AM]
போராடும் மக்களின் நம்பிக்கையை இழந்து வரும் சிறிலங்கா அரசாங்கம் – அமெரிக்க ஊடகம்
[Friday, 26/05/2017 10:26 PM]
தெற்கு, மத்திய ஆசியாவில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதற்கான கதவுகளை திறந்து விடும் அமெரிக்கா
[Tuesday, 16/05/2017 05:40 AM]
காலை வாரும் ஐநா தீர்மான வரைவு!
[Sunday, 19/03/2017 04:39 AM]
சிறிலங்காவில் இனப்பிளவைத் தூண்டும் மொழி ரீதியான அவமதிப்புகள்
[Tuesday, 07/03/2017 07:20 AM]
சொந்த நிலத்துக்காகப் போராடும் தமிழ் மக்கள்
[Friday, 03/03/2017 05:43 AM]
ஈழத் தமிழர் பிரச்சினையும் இந்திய நிலைப்பாடும் – அனைத்துலக ஊடகம்
[Monday, 27/02/2017 07:12 AM]
சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்தின் வெற்றிக்கு பணப்பை மட்டும் போதுமா?
[Friday, 24/02/2017 05:11 AM]
காணாமலாக்கப்பட்டவர்களைத் தேடுகின்ற போராட்டம்
[Tuesday, 21/02/2017 06:48 AM]
இந்திய – சிறிலங்கா உடன்பாடு : சிஐஏ அறிக்கையை நிராகரிக்கும் சிறிலங்காவின் முன்னாள் புலனாய்வாளர்
[Monday, 20/02/2017 06:12 AM]
புலிகள் சுமந்திரனைக் கொல்ல திட்டமா? இந்திய இலங்கை அரசுகளின் நாடக மேடை ஆரம்பம்
[Monday, 30/01/2017 11:25 PM]
வாய்ப்பைத் தவறவிடப் போகிறார்களா சிங்களத் தலைவர்கள்?
[Thursday, 12/01/2017 06:59 AM]
பௌத்த மதவெறியினால் மியான்மாருக்குள் ஊடுருவும் ஐ.எஸ் தீவிரவாதம்
[Monday, 09/01/2017 06:48 AM]
ஆட்சிக்கும் பிரதமருக்கும் அடித்துள்ள அபாய மணி..! - மோசமான விளைவுகளை சந்திக்குமா இலங்கை??
[Sunday, 08/01/2017 03:41 AM]
மீள வலியுறுத்தப்படும் கலப்பு நீதிமன்ற விசாரணை
[Sunday, 08/01/2017 03:40 AM]
நல்லாட்சி அரசின் பயணம் சரியான திசையில் செல்கின்றதா?
[Saturday, 07/01/2017 01:46 AM]
சர்வதேச நீதிபதிகளை பரிந்துரைத்த காரணம் இதுதான்!
[Saturday, 07/01/2017 01:44 AM]
சிறிலங்காவுக்கு சாதகமான மற்றொரு ஜெனிவா தீர்மானம்?
[Sunday, 01/01/2017 04:48 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 15 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
தமிழ்தகவல்.org
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2018). Facebook Twitter Youtube