முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
கிராமங்களில் வறுமையை வளர்த்த சிங்கள பௌத்த மேலாதிக்கம்
[Friday, 03/11/2017 05:42 AM]

அரசியற் கட்சிகளின் பதில்களை இடைக்கால அறிக்கையில் உள்ளடக்குவதென நாங்கள் தீர்மானித்துள்ளோம். இதன்மூலம் இது தொடர்பான விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வதற்கு முன்னர் அரசியற் கட்சிகளின் நிலைப்பாடுகளை அறிந்து கொள்ள முடியும். சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைக்கால அறிக்கை தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதில்லை’ என சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

பிரதமர் தெரிவித்த கருத்து சரியானதே. பரிந்துரைக்கப்பட்டுள்ள அரசியல் யாப்புத் தொடர்பாக ஒரேயொரு திட்ட வரைவே காணப்படுகிறது. அரசியலமைப்பு வரைவு என ஒன்றுமில்லை. இக்கட்டமைப்புத் தீர்மானத்திற்கு உள்ளே பரிந்துரைக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரையறுக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு இருக்கவேண்டும்  என்கின்ற அவசியமுமில்லை.

21 உறுப்பினர்களைக் கொண்ட வழிநடத்தல் குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்ட வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் எண்ணக்கருக்கள் தொடர்பாக தீவிர  சமூக கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கான அரசியற் தலைமையை சிறிலங்கா அரசாங்கம் வழங்க வேண்டிய பொறுப்பையும் கடமையையும் கொண்டுள்ளது.

சிறிலங்காவின் கூட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஸ் குணவர்த்தன, பிரசன்னா ரணதுங்க ஆகியோரும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களான நிமால் சிறிபால டீ சில்வா, சுசில் பிறேமஜயந்த மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

கூட்டு எதிர்க்கட்சியைப் பொறுத்தளவில் அரசியலமைப்புத் தொடர்பான சட்டவரைவை எதிர்க்கக்கூடிய தார்மீக உரிமையைக் கொண்டிருக்கவில்லை. கூட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஸ் குணவர்த்தன மற்றும் பிரசன்னா ரணதுங்க ஆகியோர் இச்சட்டவரைவை ஏற்றுக்கொண்டனர். மக்களைத் தவறாக வழிநடத்தும் உரிமையை கூட்டு எதிர்க்கட்சியினர் கொண்டிருக்கவில்லை.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பொறுத்தளவில் நிறைவேற்று அதிபர் முறைமை தொடர்பான தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. சிறிலங்காவின் தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் பரப்புரையின் போது வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம், தனது முதலாவது ஆட்சிக் காலத்துடன் அதிபர் பதவியிலிருந்து விலகவேண்டும். ஆனால்  இவர் 2020ல் நடக்கவுள்ள அடுத்த அதிபர் தேர்தலிலும் பிரதம வேட்பாளராகப் போட்டியிடலாம்.

அடுத்த அதிபர் எவ்வாறு தெரிவுசெய்யப்படுவார் என்பதில் ஏற்படவல்ல பிரச்சினையை இவர் தீர்க்க விரும்புகிறார். அடுத்த அதிபர் நாடாளுமன்றத்திலிருந்து தெரிவு செய்யப்பட வேண்டும் என இவர் நிச்சயமாக விரும்பலாம். இதன் மூலம் மீண்டுமொரு முறை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் அரசியல் உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொள்ளலாம் என இவர் கருதுகிறார்.

அடுத்த பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவி வகிப்பதன் மூலம் இவர் தனது பிரதமர் பதவியை மேலும் பலப்படுத்திக் கொள்வதன் மூலம் மட்டுமே அதிபர் பதவியானது மேலும் சீரமைக்கப்படுவதற்கான சாத்தியம் ஏற்படும்.

தேர்தல்களுக்கு முகங்கொடுப்பதென்பது சிறிசேனவிற்கு ஒரு இக்கட்டான சூழலாகக் காணப்படுகிறது. 2015 அதிபர் தேர்தலில் இடம்பெற்றது போன்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அதிபர் வேட்பாளரை அதே கட்சியைச் சேர்ந்த பிறிதொரு அதிபர் வேட்பாளர் போட்டியிட்டது போன்று மீண்டும் அதிபர் தேர்தலில் சிறிசேனவால் போட்டியிட முடியாது.

2015 ஆகஸ்ட் நாடாளுமன்றத் தேர்தல் மூலம் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைப்பதற்கு சிறிசேனவே தடையாக இருந்தார் என சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் கருதுகின்றனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 95 ஆசனங்களைப் பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஐ.தே.கவின் நாடாளுமன்ற ஆசனங்களை 100 இலிருந்து குறைத்து தமக்கான பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியை அமைத்திருக்கும். ஆனால் இதற்கு சிறிசேனவே தடையாக இருந்ததாக நோக்கப்படுகிறது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி பெற்றிருக்கக் கூடிய இந்த வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்கு சிறிசேன தடையாக இருந்ததால் மீண்டுமொரு தேர்தலில் இவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக போட்டியிடுவது சிரமமானதாக இருக்கும்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐ.தே.கவின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிங்கள பௌத்த வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காகச் செயற்படுகின்றனர்.

போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை, மழுங்கடிக்கும் செயற்பாடுகளில் ஐ.தே.கவினர் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போனோர் பணியகத்தை இயங்கச் செய்வதையும் தாமதப்படுத்தி வருகின்றனர்.  எவ்வித குற்றங்களுமின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை விடுவிப்பதற்கும் ஐ.தே.க தலைமை எந்தவொரு தலையீட்டையும் காண்பிக்கவில்லை.

சுருக்கமாகக் கூறில், அதிபர் சிறிசேனவின் சிங்கள பௌத்த ‘போர்க் கதாநாயகர்கள்’ அரசியலிற்கு ஐ.தே.கவும் ஆதரவளித்துள்ளது. இதனால் இக்கட்சியானது சிங்கள பௌத்த அதிகாரத்துவத்திற்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையிலுள்ளது.

2015ல் ராஜபக்சவிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அதிபர் தேர்தலில் தமிழ் முஸ்லீம் வாக்குகள் கிடைத்தது போன்று அரசியலமைப்பு வாக்கெடுப்பிலும் தமக்கு ஆதரவாக வாக்குகள் அளிக்கப்படும் என ஐ.தே.க கருதுகின்றது.

தென்னிலங்கை சிங்கள மக்களுடன் தொடர்பை ஏற்படுத்தாது தற்போதைய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான மருட்சியான முயற்சியானது புதிய அரசியலமைப்பை எதிர்ப்பதற்கு தலைமை தாங்குவதற்கு ராஜபக்சவிற்கு அனுமதியளித்துள்ளது.

அவர்கள் தற்போது வெறுமையான மைதானத்தில் உள்ளனர். இதனால் அவர்கள் தமது பந்தை தமக்கு விரும்பிய எந்தத் திசையிலும் அடிக்க முடியும். இதேபோன்று இந்த ஆட்டத்தில் தமக்கு விருப்பமான கோல் கீப்பர்கள், நடுவர்கள், ஆரவாரிக்கும் தலைவர்களைத் தெரிவு செய்யக் கூடிய நிலையில் ராஜபக்ச தரப்பினர் உள்ளனர்.

தற்போது இந்த மைதானமானது ராஜபக்சவின் ஆதரவாளர்களின் ஆர்ப்பாட்டப் பேரணிகளில் நிரம்பி வருகிறது. புதிய அரசியலமைப்பு எதிர்த்து ராஜபக்ச தரப்பினர் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். புதிய அரசியலமைப்பு எதிர்க்கும் பௌத்த குருமார்கள், கல்விமான்கள் போன்ற பலதரப்பட்டவர்களையும் ராஜபக்ச தரப்பு தன்னுடன் இணைத்து வருகின்றது.

இப்புதிய அரசியலமைப்பானது நாட்டை இரண்டாகப் பிளவுபடுத்துவதாகவும் சிங்கள போர் வீரர்கள் எதிர்கால சந்ததிகளுக்காக இந்த நாட்டைப் போரிட்டு மீட்டுள்ளனர் எனவும் ராஜபக்ச தரப்பினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

தமிழ்- முஸ்லீம் மக்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கில் மட்டுமல்லாது, பௌத்த சிங்களவர்கள் வாழும் தெற்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களிலும் சமஸ்டி நிர்வாக முறைமை வழங்கப்படும் போது அங்கு வாழும் மக்கள் தமது சொந்த நலன்களைக் கருத்திற் கொண்டு தம் சார்ந்த தீர்மானத்தை தாமாக எடுக்கும் அதிகாரத்தைக் கொண்டிருப்பார்கள். இந்த மக்களின் சொந்த நலன்களைக் கருத்திற் கொண்டு இந்த மாகாணங்களுக்கு அரசியல் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக நிற்கிறோம்.

‘ஒன்றுபட்ட’ சிங்கள பௌத்த தேசம் என்ற பெயரில் 70 ஆண்டுகளாக அதிகாரத்துவமானது மத்தியில் குவிந்திருந்தமையால் சாதாரண சிங்கள பௌத்த மக்களும் சராசரி மனித வாழ்வை வாழ்வதில் இடர்களை எதிர்நோக்குகின்றனர். சிறிலங்காவின் கிராமங்களில் வாழும் 70 சதவீதமான மக்களின் வாழ்வியலை ஒன்றுபட்ட சிங்கள பௌத்த தேசம் தொடர்ச்சியாக அளித்துள்ளது.

சிங்கள பௌத்தம் என்ற பெயரால், இந்தத் தலைவர்கள் மிக மோசமான இலஞ்ச ஊழல்கள், பொது நிர்வாகம் மற்றும் சட்ட அமுலாக்கலை அரசியல் மயப்படுத்தியமை, கிராமியப் பொருளாதாரத்தை நகர்ப்புற வாழ்வின் ‘இழிந்த பணத்திற்காக’ அழித்தமை போன்ற மோசமான செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

2016 ஜூன் மாதம் வெளியிடப்பட்ட சமூக-பொருளாதார தகவல் தொடர்பான CBSL அறிக்கையில், மேல் மாகாணத்தில் வாழும் நபர் ஒருவரின் சாராசரி வருமானமானது ரூபா 42,100 ஆகவும் தென் மாகாணம் – ரூபா 28,921, ஊவா ரூபா 24,228 மற்றும் வயம்ப ரூபா 29,343  ஆகவும் சப்ரகமுவ மாகாணத்தில் வாழும் நபர் ஒருவரின் சராசரி வருமானம் ரூபா 27,775 ஆகவும் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தளவில் இந்த வருமானம் மிகவும் மோசமாகக் காணப்படுகிறது.

‘தமிழ் மக்களுக்கு ஏன் கூட்டாட்சி நிர்வாகம் தேவை? தெற்கில் வாழும் சிங்கள மக்களுக்கு அது ஏன் தேவையில்லை என்பதை நாங்கள் கேட்க வேண்டும். கடந்த 70 ஆண்டுகளாக தெற்கின் அதிகாரத்துவமானது மத்தியில் குவிந்துள்ளதால் இங்கும் கூட்டாட்சி நிர்வாகம் அமுல்படுத்தப்பட வேண்டும்.

மத்தியில் ஆட்சி குவிந்திருந்தமையால் கிராமிய சிங்கள சமூகத்தை அபிவிருத்தி செய்வதில் தோல்வி ஏற்பட்டுள்ளது’ என சுகாதார அமைச்சர் கலாநிதிர ராஜித சேனரட்ன  செல்வநாயகம் நினைவு நாளில் (28 ஏப்ரல் 2017) கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்திருந்தார்.

1872 அரசியலமைப்பின் 09வது பரிந்துரையில் ‘ஒன்றுபட்ட’ சிங்கள பௌத்த தேசம் எனக் குறிப்பிடப்பட்ட போதிலும் இது கிராமத்தில் வாழும் ஏழை சிங்கள மக்களின் வாழ்வாதாரத்தை எவ்விதத்திலும் உயர்த்தவில்லை. தம்மைத் தாமே சிங்கள பௌத்த தேசப்பற்றாளர்கள் எனக் கூறிக்கொள்ளும் அனைவரும் சிங்கள பௌத்த மக்களின் பெரும்பாலானவர்களை வறுமையிலேயே தள்ளியுள்ளனர்.

சிங்கள பௌத்த ஒன்றுபட்ட தேசத்தின் சிங்கள ‘தேசப்பற்றாளர்கள்’ கடந்த 2010 தொடக்கம் 2015 வரையான ஆறு ஆண்டுகளில் 117,274 இளம் தாய்மார்கள் மற்றும் பெண்களை மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பணிப்பெண்களாக அனுப்பியுள்ளனர். அந்த நாடுகளில் பெண்கள் பல்வேறு உடல் மற்றும் உள ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாகுகின்ற போதிலும் தமது பொருளாதார நெருக்கடிகளைத் தீர்ப்பதற்காக இந்தப் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்வதை இந்தத் தேசப்பற்றாளர்கள் தடுக்கவில்லை.

தெற்கிலுள்ள சிங்கள மக்கள் தாம் ஏன் தமது மாவட்டத்தை விட்டு தொழில் தேடி வேறிடம் செல்ல வேண்டும் என தம்மைத் தாமே கேட்பதில்லை. இவ்வாறான பணிப்பெண் வேலைகள் நிகழ்காலத்தில் வாழ்க்கையைக் கொண்டு செல்ல உதவுமேயன்றி பாதுகாப்பான எதிர்காலத்திற்கு இது உகந்த பணியன்று.

சுரண்டல் உற்பத்தித் தொழிற்சாலைகள் மட்டும் ஏன் கிராமங்களை நோக்கி வருகின்றன எனவும் நவீன தனியார் வைத்தியசாலைகள், உயர் வர்த்தக நிலையங்கள் போன்ற நவீன வசதிகள் ஏன் கிராமங்களில் அமைக்கப்படவில்லை என ஏன் இந்த மக்கள் கேட்கவில்லை. இங்கு முதலீடுகளை மேற்கொண்டால் அதற்கான காசுப் பாய்வு கிடைக்காது என்பதும் இங்கு தொழிற்சாலைகளை அமைப்பதால் மலிவான விலையில் கூலித் தொழிலாளர்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதும் இதற்கான காரணமாகும்.

இந்த மாகாணங்களில் நிலவும் வறுமை நிலைக்கு ஒன்றுபட்ட சிங்கள பௌத்த தேசம் வேண்டும் எனக் கோரும் எவரும் பொறுப்பெடுக்க மாட்டார்கள். இவர்கள் கிராமங்களில் நிலவும் வறுமை நிலை தொடர்பாகக் கருத்துரைக்கக் கூட விரும்பமாட்டார்கள்.

இதனால் வடக்கு கிழக்கு மற்றும் வறுமை நிலையில் வாழும் கிராமிய சிங்கள மக்கள் வாழும் மாகாணங்களுக்கும் அவர்கள் தமது தீர்மானங்களைத் தாமாகவே இயற்றக்கூடிய உரிமையை வழங்கினால் அவர்கள் தாம் சந்திக்கும் வறுமை நிலையையும் ஒழிக்க முடியும்.

இந்த மக்களுக்கு கூட்டாட்சி நிர்வாக உரிமையை வழங்கினால் சிறிலங்கா சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளாக இந்த மக்கள் சந்திக்கும் வறுமை நிலையை அவர்கள் தாமாகவே ஒழிப்பார்கள்.

வழிமூலம்        – Daily mirror
ஆங்கிலத்தில்  – Kusal perera
மொழியாக்கம் – நித்தியபாரதி

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
சிறிலங்காவில் இராணுவ மறுசீரமைப்பு சாத்தியமா?
[Thursday, 21/12/2017 07:23 AM]
சிறிலங்காவில் சீனாவுக்கு செக் வைக்க விரும்பும் இந்தியா
[Sunday, 10/12/2017 12:40 AM]
பிரபாகரன்: ஆட்டிப் படைக்கும் ஆளுமை
[Sunday, 26/11/2017 08:08 AM]
முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு மீதான தாக்குதல்
[Monday, 13/11/2017 06:14 AM]
எப்படித் தலைமை தாங்க வேண்டும் என்று தலைவர்களுக்கு புத்தர் போதிக்கவில்லை
[Thursday, 09/11/2017 07:06 AM]
நாடாளுமன்ற சமநிலையை மாற்றியமைக்குமா உச்சநீதிமன்ற தீர்ப்பு?
[Tuesday, 07/11/2017 06:52 AM]
தேர்தல் அறிவிப்பு: புதிய அரசியலமைப்பு விவாதத்தை விழுங்கிவிட்டது!
[Sunday, 05/11/2017 03:25 AM]
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் வலியை வெளிப்படுத்தி நிற்கும் ஒரு மரணம்
[Friday, 27/10/2017 05:46 AM]
சிறிலங்காவில் சீனாவுக்கு செக் வைக்கும் அமெரிக்கா
[Monday, 16/10/2017 07:04 AM]
அமெரிக்கா பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்!
[Sunday, 03/09/2017 01:32 AM]
சீனாவின் கடன்பொறி – சிறிலங்கா முன் உள்ள சமநிலை சவால்
[Monday, 21/08/2017 12:45 AM]
சீனாவிடம் அம்பாந்தோட்டை – இந்தியா கவலைப்படுவது ஏன்?
[Friday, 04/08/2017 07:07 AM]
மலபார் கூட்டுப் பயிற்சி – யாரைக் குறிவைக்கிறது?
[Wednesday, 02/08/2017 07:19 AM]
சிறிலங்கா அரசுக்கு கடுப்பை ஏற்படுத்திய ஐ.நா சிறப்பு நிபுணரின் பூர்வாங்க அறிக்கை
[Monday, 24/07/2017 07:06 AM]
வரலாற்றுப் பழி சுமக்குமா கூட்டமைப்பு?
[Monday, 17/07/2017 04:12 AM]
காணாமல் போன பிரிகேடியர்! இரகசியங்கள் கசியுமா?
[Sunday, 16/07/2017 03:49 AM]
போர்க்குற்ற விசாரணைக்கான கதவுகள் திறக்கப்படுமா?
[Sunday, 09/07/2017 07:37 AM]
மக்களால் தோற்கடிக்கப்பட்ட சக்திகளின் மறைமுக சதி!
[Friday, 07/07/2017 05:23 AM]
தமிழ் தேசியவாத அரசியலின் தோல்வி!
[Friday, 07/07/2017 05:22 AM]
தமிழ்மக்கள் விக்னேஸ்வரனுக்கு உணர்த்தியிருக்கும் பொறுப்பு – நிலாந்தன்
[Sunday, 25/06/2017 04:38 AM]
வடமாகாண சபைக்கு ஓர் திறந்த மடல்! ச.வி.கிருபாகரன்
[Tuesday, 20/06/2017 01:54 PM]
விக்னேஸ்வரனின் எழுச்சியும் வீழ்ச்சியும்
[Monday, 19/06/2017 07:00 AM]
ஆப்பிழுத்த தமிழரசுக்கட்சி? அரசியல் தற்கொலைக்கு முயற்சிக்கிறதா? – நிலாந்தன்
[Sunday, 18/06/2017 07:51 PM]
வடமாகாண சபையின் எதிர்காலம்?
[Sunday, 18/06/2017 06:34 AM]
சிறிலங்காவினால் புறக்கணிக்கப்படும் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகள்
[Wednesday, 14/06/2017 07:35 AM]
போர் முடிந்து 8 ஆண்டுகளுக்கு பின்னரும் சிறிலங்கா திரும்புவதற்குத் தடுமாறும் அகதிகள்
[Sunday, 11/06/2017 06:27 AM]
சிறிலங்கா விற்பனைக்கா? – கேள்வி எழுப்பும் பாகிஸ்தான் ஊடகர்
[Thursday, 08/06/2017 05:09 PM]
வடக்கு, கிழக்கில் உலோக வீடுகளை அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் சிவில் சமூகம்
[Monday, 05/06/2017 01:39 AM]
ஹெய்டியில் சிறிலங்கா படைகளின் பாலியல் குற்றங்கள் மூடிமறைக்கப்பட்டது எப்படி? – பகுதி -2
[Monday, 05/06/2017 01:34 AM]
சிறிலங்கா படைகளின் பாலியல் குற்றங்கள் மூடிமறைக்கப்பட்டது எப்படி? – அனைத்துலக ஊடகம்
[Saturday, 03/06/2017 07:43 AM]
சிறிலங்காவுக்காக போட்டி போடும் இந்தியாவும் சீனாவும்
[Monday, 29/05/2017 10:41 PM]
போராடும் மக்களின் நம்பிக்கையை இழந்து வரும் சிறிலங்கா அரசாங்கம் : பாகம் -2
[Sunday, 28/05/2017 01:35 AM]
போராடும் மக்களின் நம்பிக்கையை இழந்து வரும் சிறிலங்கா அரசாங்கம் – அமெரிக்க ஊடகம்
[Friday, 26/05/2017 10:26 PM]
தெற்கு, மத்திய ஆசியாவில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதற்கான கதவுகளை திறந்து விடும் அமெரிக்கா
[Tuesday, 16/05/2017 05:40 AM]
காலை வாரும் ஐநா தீர்மான வரைவு!
[Sunday, 19/03/2017 04:39 AM]
சிறிலங்காவில் இனப்பிளவைத் தூண்டும் மொழி ரீதியான அவமதிப்புகள்
[Tuesday, 07/03/2017 07:20 AM]
சொந்த நிலத்துக்காகப் போராடும் தமிழ் மக்கள்
[Friday, 03/03/2017 05:43 AM]
ஈழத் தமிழர் பிரச்சினையும் இந்திய நிலைப்பாடும் – அனைத்துலக ஊடகம்
[Monday, 27/02/2017 07:12 AM]
சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்தின் வெற்றிக்கு பணப்பை மட்டும் போதுமா?
[Friday, 24/02/2017 05:11 AM]
காணாமலாக்கப்பட்டவர்களைத் தேடுகின்ற போராட்டம்
[Tuesday, 21/02/2017 06:48 AM]
இந்திய – சிறிலங்கா உடன்பாடு : சிஐஏ அறிக்கையை நிராகரிக்கும் சிறிலங்காவின் முன்னாள் புலனாய்வாளர்
[Monday, 20/02/2017 06:12 AM]
புலிகள் சுமந்திரனைக் கொல்ல திட்டமா? இந்திய இலங்கை அரசுகளின் நாடக மேடை ஆரம்பம்
[Monday, 30/01/2017 11:25 PM]
வாய்ப்பைத் தவறவிடப் போகிறார்களா சிங்களத் தலைவர்கள்?
[Thursday, 12/01/2017 06:59 AM]
பௌத்த மதவெறியினால் மியான்மாருக்குள் ஊடுருவும் ஐ.எஸ் தீவிரவாதம்
[Monday, 09/01/2017 06:48 AM]
தமிழ் பேசும் மக்களின் நம்பிக்கையை குழிதோண்டி புதைக்கக்கூடாது!
[Sunday, 08/01/2017 06:07 AM]
ஆட்சிக்கும் பிரதமருக்கும் அடித்துள்ள அபாய மணி..! - மோசமான விளைவுகளை சந்திக்குமா இலங்கை??
[Sunday, 08/01/2017 03:41 AM]
மீள வலியுறுத்தப்படும் கலப்பு நீதிமன்ற விசாரணை
[Sunday, 08/01/2017 03:40 AM]
நல்லாட்சி அரசின் பயணம் சரியான திசையில் செல்கின்றதா?
[Saturday, 07/01/2017 01:46 AM]
சர்வதேச நீதிபதிகளை பரிந்துரைத்த காரணம் இதுதான்!
[Saturday, 07/01/2017 01:44 AM]
சிறிலங்காவுக்கு சாதகமான மற்றொரு ஜெனிவா தீர்மானம்?
[Sunday, 01/01/2017 04:48 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 15 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
தமிழ்தகவல்.org
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2018). Facebook Twitter Youtube